கணனித்தகவல்கள்

அதிக நேரம் கணினிமுன் உட்காருகிறீர்களா?

2011-11-23 06:49:19, comments: 0

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால் தீவிர கழுத்து வலியை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், பதினெண் பருவத்தினரும் அதுபோன்று அதிக நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால், கழுத்து வலிக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இளம் வயதினருக்கு தலைவலி மற்றும் கழுத்துவலி அதிக அளவில் பரவி வருவதற்கு கணினி முன் அமர்வதே என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும், அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் ஆயிரத்து 73 உயர் நிலைப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு மணி நேரம் கணினி முன் மாணவர்கள் அமர்ந்துள்ளனர் என்பது குறித்தும், தலைவலி, கழுத்து வலி ஏற்படுவோரின் விகிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 50 விழுக்காட்டினருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் மாணவர்களில் வாரத்திற்கு 9 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு கணினி முன் அமர்ந்திருப்போரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாரத்திற்கு 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு கணினி முன் அமர்ந்திருப்போரில் 16 விழுக்காடு மாணவர்களுக்கு கழுத்து வலி இருப்பது தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு 25 முதல் 30 மணி நேரம் வரை கணினி முன் அமர்ந்திருப்போரில் 48 விழுக்காட்டினர் கழுத்து வலியால் அவதிப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே இதுபோன்ற தகவல்களில் இருந்து பள்ளி மாணவர்கள் எவ்வளவு மணி நேரம் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும் என அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building