கணனித்தகவல்கள்

இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையை கண்டு ரசிக்க.

2012-02-21 03:52:59, comments: 0

வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யூடியூப் தளத்தினை வாங்கிச் செம்மைப்படுத்தி அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது.

 

வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்கள் தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும், தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.

இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் கோப்புகளாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் கூகுள் அனைத்து பிரிவுகளிலும் நல்ல தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான்.

கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது.

இங்கு சென்றால் இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம்.

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building