கணனித்தகவல்கள்

நீங்களும் கார்ட்டூன் வீடியோ உருவாக்கலாம்

2012-02-21 04:16:41, comments: 0


விண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம். 
 
ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும். ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன. எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
 
ஆனால், ரெஜிஸ்ட்ரியின் வரிகளை நீக்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல; நீக்கக் கூடாத வரிகளை நீக்கிவிட்டால், விண்டோஸ் தொடர்ந்து செயல்படுவது அல்லது சில புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவது சிக்கலாகி விடும். இதனால் தான், பல புரோகிராம்கள் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு இணையத்தில் தரப்பட்டுள்ளன. சில புரோகிராம் கள் மற்ற பயன்பாட்டுடன், ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்தும் பயன்பாட்டினையும் சேர்த்துத் தருகின்றன. பெரும்பாலான புரோகிராம்கள்இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் எளியதாகவும், அதிக பயனுள்ளதாகவும் திறன் கொண்ட ஐந்து புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுத் தரப்படுகின்றன.
 
1. சிகிளீனர் (CCleaner): ரெஜிஸ்ட்ரி சுத்தப் படுத்தும் புரோகிராம்களில், மிகச் சிறப்பான இடம் கொண்டுள்ள புரோகிராம் சிகிளீனர் ஆகும். இதனைப் பயன்படுத்தியதால், சிஸ்டம் பிரச்னைக்குள்ளாகியது என்ற சொல்லை இந்த புரோகிராம் பெற்றதில்லை. இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் உள்ள ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன்படுத்து முன்னர், ரெஜிஸ்ட்ரி பைலுக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளும்படி இது அறிவுரை தரும். மேலும், சிகிளீனர், மிக நுணுக்கமாக ரெஜிஸ்ட்ரி பைலை ஆய்வு செய்து வரிகளை நீக்காது. தெளிவாக தேவையற்ற வரிகள் என்று தெரிந்தாலே, அவற்றை நீக்கும். எனவே இதனால் பிரச்னை ஏற்பட்டதில்லை.
 
2. காம்டோ சிஸ்டம் யுடிலிட்டீஸ் (Comodo System Utilities):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் மட்டுமின்றி மற்ற வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புரோகிராம் இது. இதனை http://www.comodo.com/home/support-maintenance/system-utilities என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது சிகிளீனரைக் காட்டிலும் இன்னும் ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் இடம் பிடித்த தேவையற்ற வரிகளைக் கண்டறிந்து நீக்குகிறது. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், அதன் பின், கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தினைக் கொண்டு, இந்த புரோகிராமின் ரெஜிஸ்ட்ரி கிளீனிங் திறனை அறிந்து கொள்ளலாம்.
 
3. ட்வீக் நவ் ரெக் கிளீனர் (TweakNow RegCleaner): காம்டோ அளவிற்கு நுண்ணியமாக வரிகளைக் கண்டறியாவிட்டாலும், ட்வீக் நவ் ரெக் கிளீனர், மிக வேகமாக ரெஜிஸ்ட்ரியைச் சுத்தப்படுத்தும் எனப் பெயர் பெற்றதாகும். வேகம் ஒன்று மட்டும் உங்கள் விருப்பம் எனில், இந்த ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன் படுத்தலாம். விண்டோஸ் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பைல்கள், இணைய உலாவில் உருவாக்கப்படும் பைல்கள், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் டேட்டா பைல்கள் என அனைத்தையும் சுத்தப் படுத்துவதுடன், விண்டோஸ் செட்டிங்ஸ் அமைப்பையும் சரி செய்கிறது. அத்துடன் நெட்வொர்க் செட்டிங்ஸ் சரியாக இல்லை எனில் அதனையும் சரி செய்கிறது. இதனைப் பெற http://www.tweaknow.com/ RegCleaner.php என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். 
 
4. வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Wise Registry Cleaner):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், சில வேளைகளில் விண்டோஸ் முடங்கும் நிலை உருவாகும். அதனால் தான், ஏற்கனவே உள்ள ரெஜிஸ்ட்ரி யை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுரை தரப்படுகிறது. ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்த பின்னர், அது சரியாக இயங்காவிட்டால், பேக் அப் செய்த பைலை மீண்டும் அமைத்து இயக்கலாம். பலர் இதனை மேற்கொள்வதில்லை. இந்த வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர், இதனை மிக எளிதான ஒரு வழி மூலம் நமக்கு உதவிடுகிறது. இதில் உள்ள பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்வதன் மூலம், முந்தைய ரெஜிஸ்ட்ரி பைலை மீண்டும் கொண்டு வந்து சரி செய்கிறது. இந்த புரோகிராமினைப் பெறhttp://www.wisecleaner.com/wiseregistrycleanerfree.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
 
5. ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர் (AML Registry Cleaner):அதிக திறனும், பல்முனைப் பயன்பாடும் கொண்டது ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர். நிறைய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. சொல் கொடுத்து தேடி அறியும் வசதி, நாமாக குப்பை பைல்களை அழிக்கும் வசதி, விண்டோஸ் தொடங்குகையில் இயங்கும் அனைத்து பைல்களையும் காணும் வசதி எனப் பலவகை வசதிகளைத் தருகிறது. மற்ற கிளீனர்களில் இருப்பதைக் காட்டி லும் பல செயல்பாடுகளைத் தருவதால், நிறைய பட்டன்கள் இதில் தரப்பட்டிருப் பதனைக் காணலாம். ஆனால், இதனா லேயே இதனைப் பயன்படுத்துபவர்கள், ரெஜிஸ்ட்ரி குறியீடுகளைப் பிரித்து விடுகின்றனர். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்த பின்னர், இதனைப் பயன்படுத்துவது நல்லது. இந்த புரோகிராமினைப் பெறhttp://www.amltools. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இன்னும் நிறைய ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், மேலே கூறப்பட்ட கிளீனர்கள் அனைத்தும் பல வசதிகள் கொண்டவையாக உள்ளன. நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building