கணனித்தகவல்கள்

மென்பொருள்

2011-11-28 08:35:02, comments: 0
 

Format Factory 2.6

2011-11-15 05:21:48, comments: 0

மிகவும் பிரபலமான கன்வெர்டர் மென்பொருள் இதுவாகும். இதில் அனைத்து வகையான போர்மட் வகைகளும் காணப்படுகின்றன.
 
பிக்சர், ஆடியோ, வீடியோ என பிரிக்கப்பட்டு காணப்படுகிறது. 
இவை தவிர ஆடியோ சிடி ரிப்பர், டிவிடி ரிப்பர், டிவிடி மேர்ஜ்  போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் கொன்வேட் செய்யும்போது  File இன் தரம் எந்த விதத்திலும் குறைவடையாது.
இது ஒரு இலவசமான மென்பொருளாகும் 
 
பதிவிறக்க 

http://format-factory.en.softonic.com/download#பத்பர்

Super Hide IP 3.0.9.8

2011-11-15 05:22:27, comments: 0

இது உங்களிடைய IP Address-ஐ மறைப்பதற்கான ஒரு மென்பொருளாகும்.
ஹக்கர்களிடம் இருந்து உங்களுடைய கணணியை பாதுக்கப்பதட்கு இது உதவுகிறது.
 
 

இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் அதை ஓபன் செய்து அதில் Hide IP என்பதை தெரிவு செய்தால் உங்களுடைய உண்மையான IP Address மறைக்கப்பட்டு வேறு ஒரு IP Address காண்பிக்கப்படும்.

   Change IP Every ----- Minute என்பதை தெரிவு செய்தால் நிங்கள் தெரிவு செய்யும் நேர இடைவெளியில் IP Address-ஐ  மாற்றிக்கொண்டே இருக்கும்.
 
பதிவிறக்க
 
இந்த முகவரியில் சென்று கீழே படத்தில் காட்டியவாறு ஏதாவது ஒரு Download Location ஐ தெரிவுசெய்து பதிவிரக்கிகொள்ளலாம் 
 
இது ஒரு Shareware மென்பொருளாகும்

USB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள்

2011-09-14 09:40:24, comments: 1


இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் மூன்று கோப்புகள் இருக்கும்.

readme.txt கோப்பை திறந்து உங்களை பற்றிய தகவல்களை அதில் கொடுக்கவும். பின்பு இந்த மூன்று கோப்புகளையும் உங்கள் யுஎஸ்பி டிரைவுக்கு மாற்றவும். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல் தோன்றும்.


உங்களை பற்றிய தகவல்கள் இதனை விட சிறப்பாக தோன்ற வேண்டும் என்று எண்ணினால் சற்றே மேம்படுத்தபட்ட இந்த மென்பொருளை இங்கே கிளிக்செய்து தரவிறக்கி கொள்ளுங்கள் . ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் 5 கோப்புகள் இருக்கும்.

contactme.jpg கோப்பில் உள்ள படமே உங்களை பற்றிய தகவலாக தோன்றும். அதனை எடிட் செய்து கொள்ளுங்கள்.

autosplash.ini கோப்பில் உள்ள தகவல்களை மாற்றுவதன் மூலம் தோன்றும் செய்தி விண்டோவின் உயரம், அகலம், எத்தனை வினாடிகள் தோன்ற வேண்டும் என்பனவற்றை மாற்றலாம்

[General]
Title=Help! I'm Lost
ShowTitle=False
ImageFile=contactme.jpg
ImageWidth=550
ImageHeight=250
ShowTime=5


எடிட் வேலைகள் முடிந்தவுடன் இந்த ஐந்து கோப்புகளையும் இங்கள் யுஎஸ்பி டிரைவிற்கு மாற்றி விடுங்கள். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல்கள் சில வினாடி தோன்றி மறையும்.


யுஎஸ்பி டிரவின் மீது மௌஸ் வலது கிளிக் செய்து "Explore" கிளிக் செய்வதன் மூலம் யுஎஸ்பி டிரைவில் உள்ள கோப்புகளை பார்வையிடலாம்.

இதன் மூலம் உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனாலும் அதை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

அவர் உங்களை தொடர்பு கொண்டு யுஎஸ்பி டிரைவை உங்களிடம் ஒப்படைப்பார்... அவர் ரொம்ம்ம்ப நல்லவராய் இருந்தால் மட்டுமே...


 

KM Player

2011-11-15 05:22:58, comments: 0

இது  ஒரு மிகச்சிறந்த மீடியா பிளேயர். அணைத்து வகையான வீடியோ file களையும் இயக்கவல்லது. அத்துடன் வீடியோ file களை அதிக தரத்துடன் காட்சிப்படுத்த வல்லது 
 
   இது ஒரு இலவசமான மென்பொருளாகும் 


பதிவிறக்க 
http://kmplayer.en.softonic.com/download#pathbar
 

மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் டிசைனர் 2007 இலவசம்

2011-09-14 09:40:53, comments: 0

 

Microsoft Frontpage -இன் புதிய வடிவமான Microsoft Sharepoint Designer 2007 இலவசமாக பெறுவது தொடர்பான பதிவு இது.

இணைய
பக்கங்களை வடிவமைப்பதற்கு Microsoft Frontpage உபயோகித்து பார்த்திராதவர்கள் மிக குறைவாகவே இருப்பர். மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 வெளியீட்டின் போது அதனை Frontpage ஐ மேம்படுத்தி Sharepoint Designer 2007 என்று வெளியிட்டார்கள். அது ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இருநூறு டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இப்போது Microsoft Sharepoint 2007 இலவசமாக மைக்ரோசாப்ட் வழங்குகிறது. நல்ல விஷயம்தான்.

அதனை தரவிறக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். தோன்றுகின்ற பக்கத்தில் "Registration Required for This Download" என்று உங்களை பதிவு செய்ய சொல்லும்.
பதிவு செய்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் அளிக்கும் மின்னஞ்சல் முவரிக்கு Verfication மின்னஞ்சல் அனுப்புவார்கள். அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சென்றால் நீங்கள் தரவிறக்கம் செய்வதற்கான பக்கம் தோன்றும்.

தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்த கோப்பு SharePointDesigner.exe என்ற பெயரில் 295.89 MB என்ற அளவில் இருக்கும். அதனை இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்தி பாருங்கள்.
இந்த மென்பொருள் இணைய வடிவமைப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். Microsoft Sharepoint குழுவினருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

 

விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்களுக்கு இரண்டு இலவச கருப்பு வண்ண தீம்களை (Theme) தரவிறக்கம் செய்வது தொடர்பான பதிவு இது.

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் பெரும்பாலும் அதனுடன் வரும் நீல வண்ண தீமையே (Theme) உபயோகித்து வருவோம். அது நன்றாகவே இருந்தாலும் என்னை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. கருப்புதான் எனக்கு ரொம்பவும் புடிச்ச கலரு.
இணையத்தில் தேடி பார்த்ததில் மைக்ரோசாப்ட்காரவுகளே கருப்பு கலருல தீம் வெளியிட்டு இருக்காக. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கு. உங்களுக்கும் கருப்பு கலரு புடிக்குமுன்னா இரண்டு கருப்பு கலர் தீம் பத்தி அறிமுகம் தாரேன். உபயோகிச்சு பாருங்க...

1. Royale Noir

இந்த தீமை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது இரண்டு வண்ணங்களுடன் வருகிறது. நீல நிறத்திற்கு Royale என்றும், கருப்பு நிறத்திற்கு Royale Noir என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

தரவிறக்கிய ZIP கோப்பை “C:\Windows\Resources\Themes\” போல்டரில் Extract செய்து கொண்டு Royale Noir (”C:\Windows\Resources\Themes\Royale Noir\”) என்ற போல்டரை ஓபன் செய்து கொள்ளுங்கள்


அங்கே “luna.msstyles” என்ற கோப்பை ஓபன் செய்து Appearance --> Color Scheme என்பதில் "Royale Noir" என்பதனை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்யுங்கள். தீம் செயல்படுத்தபட்டு விடும்.


உங்கள் கணினி கருப்பு வண்ண தீமினால் அலங்கரிக்கப்படும்.


கருப்பு வண்ணத்தில் மற்றுமொரு தீம் பற்றி பார்ப்போம்.

2. Zune

இந்த தீம் , மைக்ரோசாப்ட்டால் "Zune" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். .msi கோப்பாக இருக்கும். அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அடுத்து தோன்றும் "Display Properties" விண்டோவில் "Apply" செய்து "OK" கிளிக் செய்து கொள்ளவும்.


இந்த
தீமும் அருமையாக இருக்கும். பிடித்திருந்தால் வைத்து கொள்ளுங்கள். பிடிக்கவில்லை எனில் பழைய நீல நிற தீமுக்கு திரும்ப விரும்பினால்

Start --> Control Panel --> Display --> Display Properties --> Themes சென்று உங்களுக்கு வேண்டிய தீமுக்கு மாறி கொள்ளுங்கள்.

ஏதேனும் குழப்பங்களோ, தடங்கல்களோ இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காது கேட்கவும். நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.

கணினியில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிய முறையில் உபயோகிக்கும்படி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை என்று சுட்டி காட்டினால் என்னை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்.

Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.

2011-09-14 14:11:07, comments: 0

_________________

உங்கள் கோப்பை இலவசமாக பதிவேற்றம் செய்து, பின் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த இணைப்புக்கு சென்று இலவசமாக ஒரு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம்.

__Nakido Download Options

Nakido Flag என்ற இந்த சேவை இணையத்தளத்தில் உள்ள Download  manager .
இது peer to peer  என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி உள்ளதால் உங்கள் தரவிறக்கத்தை வேகமாக்கும்.இரண்டு கோப்பை ஒன்றன் பின் ஒன்றாக தரவிறக்கம் செய்யும் வசதி மற்றும் தரவிறக்கம் செய்யும் கேப்புகள் தடை ஏற்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதி,ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

_______Nakido Flag

இந்த தளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்து அதன் பிறகு உபயோகிக்க தேவை இல்லை. நேரடியாக உங்கள் கோப்பை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.

http://www.nakido.com/


 

கணினியில் நீங்கள் செய்யும் வேலையை குறைக்க உதவும் மென்பொருள்..

2011-09-14 14:17:53, comments: 0

உங்கள் கணினியை நன்றாக செயல்பட அதனுள் இருக்கும் தேவை இல்லா கோப்புகளை அகற்ற வேண்டும். இந்த வேலையை செய்ய பலரும் சோம்பேறித்தனம் படுவீர்கள்.

__________________

உங்களுக்கு உதவும் வகையில் CCleaner எனப்படும் இந்த மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த மென்பொருள் பலருக்கும் தெரிந்து இருக்கும் தெரியாதவர்களுக்கு இந்த இடுகை உதவட்டும்.

இந்த மென்பொருளை கொண்டு எளிதாக உங்கள் கணினியில் இருக்கும் தேவையற்ற கோப்புகளை அகற்றலாம். இதனால் உங்கள் கணினியின் செயல்பாடு அதிகரிக்கும். மேலும் உங்கள் HardDisk கின் மதிப்புள்ள இடங்களை மீட்டுத்தரும். நீங்கள் இணையத்தில் செய்யும் செயல்களை சேமித்து வைக்கும் Internet History ஆகியவற்றையும் நீக்கும். முழுமையாக Registry யை சுத்தபடுத்தும்.

இதன் முக்கியமான செயல்பாடு, இந்த வேலைகள் அனைத்தையும் செய்ய குறைந்த வினாடிகளே தேவைப்படும்.இதில் Spyware or Adware எதுவும் இல்லை.

Internet Explorer

Internet Explorer
Temporary files, history, cookies, Autocomplete form history, index.dat.

Firefox

Firefox
Temporary files, history, cookies, download history, form history.

Google Chrome

Google Chrome
Temporary files, history, cookies, download history, form history.

Opera

Opera
Temporary files, history, cookies.

Apple Safari

Safari
Temporary files, history, cookies, form history.

Windows

Windows
Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.

Registry

Registry Cleaner
Advanced features to remove unused and old registry entries.

ஆகிய வேலைகளை செய்யும்.

CCleaner Download


 

iTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்

2011-09-14 14:12:08, comments: 0

________________

iTunes ஒரு இலவச மென்பொருள் இது Mac மற்றும் PC கணினி இரண்டிலும் வேலை செய்யும். அணைத்துவகை டிஜிட்டல் இசை மற்றும் நிகழ்படமும் இயங்கும். iPod, iPhone, மற்றும்  Apple டிவி கோப்புகளை இணைத்து இயங்க கூடியது. இதனுள் இயங்கும் superstore பொழுதுபோக்கு தகவல்களை 24/7 வாங்க உதவும்.

இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு

2011-09-14 09:28:05, comments: 0

 

மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் (Operating System) விண்டோஸ் விஸ்டா குறிப்பிடத்தக்கது. பல பிரச்சினைகளுக்கு இடையில் வெளிவந்தது. மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்கு தள பதிப்பான விண்டோஸ் 7 விரைவில் வெளியிட போகிறது. இந்நேரத்தில் விண்டோஸ் விஸ்டாவை மேம்படுத்தும் நோக்கில் சர்வீஸ் பேக் 2 மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.

சர்வீஸ் பேக்குகள் வெளியிடப்படும் போது அவற்றை நிறுவி உங்கள் இயங்குதளத்தை மேம்படுத்தி கொள்வது முக்கியமாகும். அது உங்கள் கணினிக்கு பாதுகாப்பையும் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கும்.

விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 நீங்கள் கீழ் கண்ட முறைகளில் பெறலாம்.

EXE இன்ஸ்டாலர் பேக்கேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB948465-X86.exe . கோப்பின் அளவு : 348.3 MB

ISO இமேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி DVD யில் எழுதி பின்பு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : 6002.18005.090410-1830_iso_update_sp_wave0-RTMSP2.0_DVD.iso . கோப்பின் அளவு : 1376.8 MB
முக்கியமாக இதை நீங்கள் நிறுவும் முன்பு உங்கள் விஸ்டாவில் சர்வீஸ் பேக் 1 நிறுவி இருக்க வேண்டும். விஸ்டா சர்வீஸ் பேக் 1 வேண்டுவோர் இந்தலின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பின்பு சர்வீஸ் பேக் 2 நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB936330-X86-wave0.exe . கோப்பின் அளவு : 434.5 MB .

விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பாளர்கள் தவறாது செய்யவும்.

AV Video Morpher 3.0

2011-11-15 05:17:27, comments: 0

இது ஒரு மல்டிமீடியா வீடியோ பிளேயர் ஆகும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பார்க்கும் வீடியோ காட்சிகளுக்கு இந்த பிளேயரிலேயே எஃபெக்ட்களை வழ‌ங்கி பார்க்கலாம். ஆனால் அவ்வாறு வழ‌ங்கப்படும் எஃபெக்டுகள் தற்காலிகமாகவே, அதாவது நீங்கள் பிளே பண்ணும்போது மட்டும்  காணப்படும்.இதன் சிறப்பம்சங்கள்
* சிறப்பான வீடியோ பிளேயரினை கொண்டிருத்தல்
* பிளே பண்ணும்போது வீடியோக்களுக்கு எஃபெக்ட்க்களை வழ‌ங்கி பார்க்கலாம்
* வீடியோ "மோர்ப்பெர்" இனை கொண்டிருத்தல்
* வீடியோ கொண்வேர்ட்டரை கொண்டிருத்தல்
* டிஸ்க் பேர்ண‌ர் இணைந்து வந்துள்ளது
இவை தவிர ஆடியோ எஃபெக்ட், வீடியோ ரெக்கோர்டர், கவர் டிசைனர், போன்ற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://www.newfreedownloads.com/download-AV-Video-Morpher.html

இப் பக்கத்துக்கு சென்று கீழ் காட்டியவாறு Download link 1 என்பதை கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளலாம்.
 
குறிப்பு : இம் மென்பொருள் trial version ஆகும். இதன் ஒரிஜினல் விலை 49.95 $


 

ScreenCapStudio 1.0.2.7 

ஏனைய ஸ்க்ரீன் கப்சர் மென்பொருள்களை விடவும் இது கையாள்வதற்கு இலகுவாக உள்ளது. 
அது தவிர இம் மென்பொருள் பல வசதிகளையும் கொண்டுள்ளது.
இது ஒரு இலவசமான மென்பொருளாகும். 
மேலும் இது 5 பிரயோசனமான டூல்சுகளையும் கொண்டுள்ளது.
 
           Screen Recorder Tool
               Video Editing Tool
               Video Converter Tool
               Video Webpage Designer Tool
               Video Uploading Tool
மேலும் 
   * விடியோ பிளேயர் 
   * மென்பொருள் பதிவிறக்கி 
என்பவட்டையும் கொண்டுள்ளது.
 
பதிவிறக்க 
http://www.top4download.com/screencapstudio/download-jcidfiiz.html
 
குறிப்பு : இம் மென்பொருளை நிறுவிய பின்னர் ஆன்லைன் மூலமாகவே இதற்குரிய Activation Code- இணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள்

2011-09-14 09:28:36, comments: 0விண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7 க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் EnhanceMySe7en.

இத்தனை உபயோகித்து விண்டோஸ் 7 இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.

தோற்ற படங்கள் (Screen Shots)


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.

பெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க

2011-09-14 09:29:16, comments: 0

 

பெரிய படங்களின் அளவையும் அதன் கோப்பு அளவையும் (File Size) இலவச மென்பொருள் மூலம் மிக எளிதான முறையில் குறைப்பது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.

டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் போது MB கணக்கில் அவை அளவில் பெரியதாக இருக்கும். அவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் போது அதிக நேரம் பிடிக்கும். பெரிய படங்களை மைக்ரோசாப்ட் வோர்ட் , பவர்பாய்ண்ட் போன்றவற்றில் உபயோகிக்கும் போதும் அதிக இடம் பிடித்து கொள்ளும். இது போன்ற சமயங்களில் படங்களின் அளவை குறைக்க வேண்டி இருக்கும். சாதாரணமாக இதனை செய்ய போடோஷோப் , பெயிண்ட் போன்ற மென்பொருள்கள் மூலம் படத்தை திறந்து, படத்தின் அளவை குறைத்து மீண்டும் புதிய பெயரில் சேமிப்போம். நேரம் அதிகம் விரயம் ஆகும்.

தற்போது திறக்காமலே வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இதற்கான இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் படத்தை உபயோக படுத்தும் போது அந்த படத்தின் Thumbnail மீது வலது கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் "Resize Pictures" என்ற புதிய ஆப்சன் இருக்கும்.

அதனை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் small (640 x 480 pixels), medium (800 x 600 pixels), large (1024 x 768 pixels) and Handheld PC (240 x 320 pixels) தோன்றும் அளவுகளில் உங்கள் தேவையை அளித்து OK கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு குறைந்த புதிய படம் கிடைத்துவிடும்.
எடுத்துகாட்டாக என்னிடம் உள்ள man.jpg , 3008x2000 என்ற அளவில் 2.5 MB கோப்பளவு (File Size) கொண்ட படம். அதனை நான் 640x480 அளவு கொண்ட படமாக சுருக்கி கொண்டேன். man(small).jpg என்ற பெயரில் சேமிக்கப்பட்டு விட்டது. அதன் கோப்பளவு (File Size) 92.2 KB மட்டுமே. அதிக சேமிப்பு. ஈமெயில் மூலம் அனுப்ப விரும்பினால் மிக எளிதாக அனுப்பி விடலாம்.
புதிய பெயரில் சேமிக்காமல் , ஒரிஜினல் படத்தில் பெயரிலேயே சேமிக்க விரும்பினால் "Resize the original pictures (don't create copies)" என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஒரிஜினல் படமே அளவு குறைவுள்ளதாக மாறி இருக்கும்.

நிறைய படங்களை ஒரே நேரத்தில் அளவை குறைக்க விரும்பினால், படங்கள் உள்ள போல்டரை ஓபன் செய்து வேண்டுமென்ற படங்களை செலக்ட் செய்து கொண்டு வலது கிளிக் மூலம் "Resize Pictures" கொடுக்கவும்.


பின்னூட்டத்தில் வடுவூர் குமார் அவர்கள் அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவு பற்றி கேட்டிருந்தார். அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. நன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்த விவரங்களை பாருங்கள்

1. 4368x2912 ஒரிஜினல் படம் - 1.21 MB
2. 640x426 அளவில் சுருக்கப்பட்ட படம் - 55.6 KB
3. 800x533 அளவில் சுருக்கப்பட்ட படம் - 71.0 KB
4. 1024x682 அளவில் சுருக்கப்பட்ட படம் - 95.8 KB

படத்திற்கு நன்றி ajithfans.com


இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை விட ஏதேனும் எளிய மென்பொருள் இந்த வேலைக்கு இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். உங்கள் நண்பர்களுக்கு இந்த பிளாக்கை அறிமுக படுத்தவும்

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

2011-09-14 09:30:48, comments: 0

 

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

அதில் "Scan" பட்
« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building