கணனித்தகவல்கள்

யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட

2011-11-23 06:52:53, comments: 0

யு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட
யு�ட்யூப் தளத்தினைப் பார்த்துக் கொண் டிருக்கையில் நல்லதொரு படம் ஒன்று உங்கள் கவனத்தை ஈர்க்கிறது. அதனை நீங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் பிரசன்டேஷன் பேக்கேஜுக்கு சரியான ஒரு இணைப்பாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். இதனை எப்படி உங்கள் பேக்கேஜில் இணைக்கலாம் என்று பார்ப்போமா?

முதலில் உங்கள் கவனத்தைக் கவர்ந்த யு�ட்யூப் மூவியை டவுண்லோட் செய்திடவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவில் பதிந்து சேவ் செய்திடவும். பெரும்பாலான மூவி பைல்கள் பிளாஷ் வீடியோ பார்மட்டில் இருக்கும். டவுண்லோட் செய்த மூவியை வேறு எந்த பொதுவான பார்மட்டுக்கு மாற்றவும். எடுத்துக் காட்டாக ..wmv (windows media video file), avi (windows video file)  அல்லது .mpeg (movie file)  என எந்த பார்மட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதன் பின் எந்த பிரசன்டேஷன் பேக்கேஜில் இதனை இணைக்க வேண்டுமோ அதனைத் திறந்து கொள்ளவும்.

 

பின் Insert  மெனு திறக்கவும். இதில் “Movies and Sounds”  என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் “Movie from File”  என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் எந்த ஸ்லைடில் இணைக்க வேண்டுமோ அந்த ஸ்லைடைத் திறக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது “Do you want your movie to play automatically in the slide show? If not, it will play when you click it”  என்ற நீளமான வாசகம் இருக்கும். ஸ்லைட் ஷோ காட்டப்படுகையில் குறிப்பிட்ட ஸ்லைட் வருகையில் தானாக இயக்கப்பட வேண்டுமா? அல்லது கிளிக் செய்து இயக்க வேண்டுமா? என்று ஒரு ஆப்ஷன் கேட்கும்.  நீங்கள் விரும்பும் வகையில் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்யவும். பின் நீங்கள் பிரசன்டேஷனைத் திறக்கையில் இந்த மூவி நீங்கள் செட் செய்தபடி ஓடும். பின் மற்ற ஸ்லைடுகள் காட்டப்படும்.

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building