கணனித்தகவல்கள்

internet இல் 3D யில் உலா வர வேண்டுமா??

2011-12-10 09:27:14, comments: 0

 

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது இப்பொழுது அனைவரும் 3D என்னும் புதிய அறிய தொழில்நுட்பத்தின் பிடியில் உள்ளனர் . சினிமா துறையிலும் சரி கணினித்துறையிலும் சரி இப்பொழுது 3D-யின் மோகம் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய நபர்கள் 3D யில் வேலை பார்ப்பதை இப்பொழுது விரும்புகிறார்கள். இப்பொழுது 3D டெஸ்க்டாப் என்ற ஒரு மென்பொருளை பற்றி இணையத்தில் படித்தேன் இதை பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அதை பற்றி படித்து கொண்டிருந்தபோது தான் இந்த 3D உலாவியை பற்றி தெரிந்துகொண்டேன்.

இந்த உலாவி மூலம் நீங்கள் இணையதளங்களை 3Dயில் பார்வையிடலாம் அது மட்டுமல்ல இந்த தளத்தில் உள்ள தேடுபொறியில் சொற்களை சொடுக்கினால் அதுவும் 3D-யில் தான் தோன்றும்.இந்த தளத்தில் GOOGLE, YOUTUBE, WIKIPEDIA போன்ற தளங்களில் இருந்து தேடலாம்.

இந்த தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் இடது பக்கத்தில் உள்ள மெனுவில் தளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் பின்னர் குறிச்சொற்களை அதில் உள்ளீடு செய்யுங்கள் அந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடுவது கிடைக்கும்.உதாரணத்திற்கு நீங்கள் YOUTUBE-இல் ஹாக்கிங் பற்றிய வீடியோ கோப்புகளை தேடுவதற்கு மேலே YOUTUBE-ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் HACKING என்று தட்டாசு செய்யுங்கள் பின்னர் SEARCH பொத்தானை அழுத்துங்கள் நீங்கள் தேடுவது அழகாக உங்களுக்கு கிடைக்கும்.

இந்த தளத்தில் நீங்கள் அந்த மென்பொருளை பதிவிறக்கி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல இதை சொடுக்கவும் : 


இந்த தளத்தில் அந்த உலாவியை பதிவிறக்கி கொள்ளவும். பின்னர் அதை நிறுவிக் கொள்ளவும் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த மென்பொருளை திறக்கவும் அதில் உள்ள ADDRESS BAR-இல் தளத்தை தட்டாசு செய்யுங்கள் பின்னர் நீங்கள் 3D-யை கண்டு ரசியுங்கள்.மேலும் இதில் BOOKMARKS, FAVORITES ஆகியவை டூல்பரிலேயே இருக்கிறது. மேலும் இது இப்போதைக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டும் தான் இயங்குகிறது.

மேலே உள்ள தளத்தில் பதிவிறக்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.

அதற்க்கான சுட்டி 
« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building