கணனித்தகவல்கள்

Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்

2011-11-22 18:10:24, comments: 0

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும். 

 
கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று. .  பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும். 
கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.


இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.

குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building