தொழில்நுற்பம்

அதிவேக பேரழிவு ஆயுதத்தை பரிசோதித்த அமெரிக்கா

2011-11-22 15:40:14, comments: 0

அதிவேக பேரழிவு ஆயுதத்தை பரிசோதித்த அமெரிக்கா

 

Posted Imageஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணித்து தொலைதூர இலக்குகளை மிக துல்லியமாக தாக்கவல்லது என்று அமெரிக்க பென்ரகனால் வர்ணிக்கப்படும் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவாயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணை.. அமெரிக்க ஹவாயில் இருந்து பசுபிக்கின் அடுத்த முனையில் உள்ள ஒரு இலக்கை சுமார் 3700 கிலோமீற்றர்கள் தூரத்தை வெறும் 30 நிமிடங்களுள் பயணித்து தாக்கி அழித்து இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியுள்ளது.

அண்மையில் தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக முறுகிக் கொண்டுள்ள நிலையில் இந்தப் பரிசோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிற நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும்.. ஏவுகணைகளையும் தயாரிப்பதாகச் சொல்லி ஜனநாயகம் காக்கிறோம் என்ற போர்வையில்.. அமெரிக்கா அவற்றின் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து வருவதும். குறிப்பிடத்தக்கது..!

« back

Add a new comment

Manifo.com - free website building