தொழில்நுற்பம்

ஆபரேஷன் செய்யும் ரோபட்டுகள்

2011-11-23 07:24:59, comments: 0

அறிவியல் துறையில் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் அரங்கேறி வருகின்றன. அறிவியல் துறையில் கண்டுபிடிக்கப்படும் புதிய விஷயங்கள் பற்றிய தகவல்கள் அறிவியல் அதிசயம் பகுதியில் தொடராக வெளிவருகிறது. இதில் கடந்த சில வாரங்களாக ரோபட்டுகள் எனப்படும் மனித எந்திரங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்று வருகிறது. கடந்த வாரம் மருத்துவ துறையில் ரோபட்டுகளின் பங்கு பற்றிய தகவல்கள் இடம் பெற்றது. இந்த இதழில் ஆபரேஷன் செய்யும் ரோபட்டுகள் குறித்த தகவல்கள் இடம் பெறுகிறது. சிக்கலான ஆபரேஷன் என்று கருதப்படும் இருதய ஆபரேஷன் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சையில் டாக்டர்களுக்கு உதவுகின்றன. ரோபட்டுகள். இந்த ஆபரேஷன்கள் துல்லியமாக நடக்க டாக்டருக்கு உதவும் வகையில் ஆபரேஷன் செய்யும் ரோபட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பற்றிய தகவல்கள் இந்த இதழில் இடம் பெறுகிறது.

ஆபரேஷன் செய்யும் ரோபட்டுகள்

ரோபட் மூலம் அறுவை சிகிச்சை என்பது ஒரு செயல்முறை ஆகும். ஒரு கம்ப்யூட்டரில் ஏற்கனவே செலுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட புரோகிராம் மூலம் திட்டமிட்டு செய்யப்படும் பணியே ரோபட் அறுவை சிகிச்சை ஆகும்.

இன்னும் சொல்லப் போனால் மருத்துவ நிபுணர்கள், ஒரு ஆபரேஷனுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு வழிமுறைகளைக் கையாண்டு சிறப்பாக, வெற்றிகரமாக நடத்தி முடிக்கின்றார்களோ அது போன்றே மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக அல்லது மருத்துவ நிபுணர்களுக்கு பதிலாக ரோபட்டுகள் பணிபுரிகின்றன.

ரோபட்டுகளின் தன்னியக்க திறன்கள் மூலம் பெறப்படும் பயன்கள் ஏராளம். குறிப்பிட்ட புரோகிராம்கள் மூலம் ரோபட்டுகளின் இயக்கங்களை மிகத் துல்லியமாகவும் அதே சமயத்தில் மிகவும் திறமையாகவும் செயல்பட வைப்பது இதன் சிறப்பம்சமாகும். ரோபட்டுகள் தங்கள் பணியில் மிகுந்த கவனமும், சரியான திசை வேகமும், முடுக்கு வேகமும், மிகத் துல்லியமாகவும் செயல்படுகின்றன. ஒரு சிறு மயிரிழை அளவு கூட தவறுகள் நிகழா வண்ணம் திறம்பட கையாளுகின்றன.

ரோபட்டுகளின் தன்னியக்க திறன்களால் மீள் நிகழ்வு பணி மற்றும் நம்பகத்தன்மை மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகின்றன.

கால நேரத்தை கணக்கிடும் போது ரோபட்டுகள் முன்னணி வகிக்கின்றன. பல கட்டங்களை உள்ளடக்கிய அறுவை சிகிச்சையின் போது, ஒரு கட்டத்தை முடித்த பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு மனித மருத்துவ நிபுணர்கள் போல யோசிக்காமல் அல்லது தயங்காமல் மடமட என்று பணிகளை முடித்து விடுகின்றன.

இந்த செயல் திறன்கள், சில சமயங்களில் ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடுகின்றன என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் ரோபட்டுகள் செய்த தவறுகள் எல்லாம் பரிசீலிக் கப்பட்டு அலசி ஆராய்ந்து இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு புரோகிராம்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் சிலர் அறுவை சிகிச்சைகளில் வழிமுறைகளை திட்டமிடுவதற்கு கால விரயங்கள் ஆகின்றன என்கிறார்கள். இருந்தாலும் ஒரு சிறப்பான திட்டமிடுதல் மற்றும் அறுவை சிகிச்சை வழிமுறைகள் மூலம் இந்த கால விரயத்தை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குத் தேவையான 'அறுவை திறன் திட்டமிடுதல்' எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதை பார்ப்போம்.

அறுவைத் திறன் திட்டமிடலை 3 முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். அவை

1. நோயாளியின் உடலை உருவபிம்பங்கள்  எடுப்பது.

2. இந்த பிம்பங்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை வைத்து முப்பரிமாண (3D) மாதிரியாக மாற்றுவது.

3. அறுவை சிகிச்சைக்கான திட்டமிடுதல் மற்றும் ஒத்திகை.

ரோபட்டை நோயாளியுடன் இணைக்கும் பதிவிணைப்பு முறைகள்
ரோபட், நோயாளி பதிவிணைப்பு முறை என்பது ஏற்கனவே ரோபட்டுன் ஏற்றப்பட்ட நோயாளியின் டேட்டாவுடன் சிகிச்சைப் பெறப்போகும் நோயாளியுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு முறையே ஆகும். இதில் இரண்டு முக்கிய கட்டங்கள் உள்ளன. ரோபட்டுடன் நோயாளியை இணைப்பது மற்றும் அறுவை சிகிச்சை பதிவிணைப்பு முறை ஆகும்.

ரோபட்டை நோயாளியுடன் இணைப்பு ஏற்படுத்துவது ரோபட் அறுவை சிகிச்சைக்கு தேவையான முக்கியமான அம்சமாகும். ஏற்கனவே கூறியதுபோல் ரோபட்டுகள் முன் நிரவமைப்பு  வழிக்காட்டுதலின்படி செயல்படுவதால், இந்த நிரவமைப்பு அமைப்பது சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை  வேறுபட்டால் ஏற்படும் மாற்று அளவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படா விட்டால் நோயாளிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ரோபட் முழுக்க முழுக்க தன்னிச்சையாக இயக்கத்திற்கு உட்படுத்தாமல் சில வெளிக்கட்டளைகள் மூலமும் இயக்கத்திற்கு உட்படுவது மிகவும் பாதுகாப்பான நம்பகத்தன்மை உள்ளதாகவும் விளங்கும்.

மருத்துவர்களால் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது சிகிச்சைக்கு ஏதுவாக நோயாளிகளை நிலைகொள்ளச் செய்து (படுக்க வைப்பது போன்ற) பாரம்பரிய முறையாகும். அதாவது காலின் மொழியில் அறுவை சிகிச்சை செய்யும் போது கால் அசையாமல் இருப்பதற்காக காலை கட்டுவது, மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது தலை அசையாமல் வைப்பதற்காக 'கிளாம்ப்' செய்யப்படுவது போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. ரோபட் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு இதே முறைகள் கையாளப்படுகின்றன.

டேட்டாக்களையும் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளியின் உடல் கூறுகள் மூலம் கிடைக்கும் டேட்டாவையும் வைத்து ஒரே மாதிரியான பொதுவான குறிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த பொதுக்குறிப்புகள் ரோபட் மிகவும் பாதுகாப்பாக இயங்க வழிவகை செய்கின்றன. இப்பொழுது குறிப்புகளை எட்டுவதற்கு ஆரம்ப நிலை யுக்திகள் கையாளப்படுகின்றன.

இந்த முதல் மற்றும் வழக்கமான முறை என்பது அறுவை சிகிச்சைக்குமுன் நோயாளியின் உடல் கூறுகளை தெள;ளத்தெளிவாக அறிந்து கொள்ளப்படுவது. இதற்கு ஃபிடுசியல்ஸ் எனப்படும் அடையாளக் குறியீட்டு கருவி  பயன்படுகிறது. இதன் மூலம் அறியப்படும் நோயாளியின் உடல் கூறுகள் ஏற்கனவே ஏற்றப்பட்ட டேட்டாக்களை துல்லியமாக ஒப்பிட்டுப் பார்த்து ஒழுங்குபடுத்துகிறது. இந்த பிடிசியல்ஸை உபயோகிக்கும் போது நோயாளிகளுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஃபிடுசியல்ஸ் முறைக்கு மாற்றாக மேற்பரப்பு பதிவி ணைப்பு முறை  பயன்படுத்தப்படுகிறது.

ரோபட் அறுவை சிகிச்சை முறைகளை செயல்படுத்தல்

ரோபட்கள் தன்னிச்சையாக, ஏற்கனவே ஏற்றப்பட்ட நிரவமைப்புகளின்படி நிகழ்காலத்தில் பணியாற்றும் தன்மை கொண்டது. Pழுஆயு இயந்திரக்கை போன்ற தொழிற்சாலை ரோபட்டுகளை பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் ரோபட்டுகளை வடிவமைத்து தயாரிப்பதற்கு மிக அதிகமாக பொருள் செலவாகிறது. ரோபட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் பணிக்கு தேவைப்படும் மூலதனம் பலகோடி ரூபாயாகும். மற்றும் சிகிச்சைக்கு உகந்ததரமான ரோபட்டுகள் தயாரிக்க முடியும் என்பது முழு உத்திரவாதமும் கிடையாது. மேலும் ரோபட் சிகிச்சைக்கு ஏற்ற பாதுகாப்பு வழி முறைகள் மற்றும் தர நிர்ணயங்கள் கிடையாது. மருத்துவ நிபுணரும் இதைக் கையாளுவது மற்றும் பராமரிப்புக்கு தேவையான தொழில் நுட்பத்திலும் கைதேர்ந்தவராக இருத்தலும் அவசியமாகிறது. இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு ரோபட் தயாரிப்புக் கம்பெனிகள் பொறுப்பேற்க தயங்குகின்றன. எது எப்படியோ இப்போதைக்கு தொழிற்சாலை ரோபட்டுகளில் பணி அறுவை சிகிச்சைக்கு ஏற்ற பிரத்தியேக ரோபட்டுகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. ரோபட் அறுவை சிகிச்சைக்கு ஏற்ற வழிமுறைகள் ஒரு முறை கையாளப்பட்டுவிட்டதால் மேலும் அதன்பிறகு இந்த முறைகள் மேம்படுத்தப்பட்டு நம்பகத்தன்மை கொண்ட ரோபட்டுகள் வெளிவரத் தொடங்கும். அப்பொழுது ரோபட்டுகள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்போது மருத்துவ நிபுணர்கள் கைக்கட்டிக் கொண்டு கவனித்துக் கொண் டிருந்தால் போதும்.

வழிமுறைகளை மதிப்பிடல் :

எந்த ஒரு அறுவை சிகிச்சைக்கும் வழிமுறைகளை மதிப்பிடல் என்பது அறுவை சிகிச்சைகள் ஒன்றிணைந்த பகுதியாகும். மருத்துவ நிபுணர்கள் பல்வேறு கட்டங்கள் கொண்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது ஒவ்வொரு கட்டம் முடிந்த பிறகு அடுத்தடுத்த கட்டங்கள் செல்வதற்கு முன் சிகிச்சை பணிகளை சரி பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் மிக மிக குறைவு. அறுவை சிகிச்சைகள் முடிந்த பிறகு சிகிச்சை திருப்தியளிக்கப்படாவிட்டால் மீண்டும் முதலிலிருந்து சிகிச்சைகள் மேற்கொண்டோ அல்லது குறிப்பிட்ட கட்டத்தை மீண்டும் செய்தோ சரி செய்ய வேண்டியதிருக்கிறது. ஆனால் ரோபட் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், முறையாக ஒவ்வொரு கட்டப்பணியையும் துல்லியமாக சரியாக முடித்துக் கொடுக்கின்றன. இதனால் மருத்துவ நிபுணர்களைவிட ரோபட்டுகள் திறம்பட பணியாற்றுகின்றன. இதற்கு எடுத்துக்கட்டாக செயற்கை இடுப்பு எலும்பு பொருத்துவது ஆகும். இதற்கு மிகத்துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு செயற்கை பாகங்களை எலும்பு இணைப்புகளுடன் பொருத்தப்படும்.

துல்லிய அளவு சதவிகிதம் ரோபட்டுகள் 83 சதவிகிதம் ஆகும். மனித மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் போது 33 சதவிகிதம் ஆகும். இதில் இருந்தே ரோபட்டுகளின் திறமைகள் வெளிப்படுகிறது.

ரோபட்டுகள் திறமையாக பணியாற்றுவதோடு முடிந்து விடவில்லை, பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது செலவினங்களும் குறைகின்றன.

******
 
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள்

ரோபட் உதவியுடன் பல அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மேன்பட்ட தொழில் நுட்பம் மூலம் காரோனரி தமனி மாற்று வழி அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சைக்காக நோயாளியின் உடம்பில் ஒரு சாவிதூர அளவிற்கு துளையிடப்பட்டு அதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது மாற்றுவழி அறுவை சிகிச்சை முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப் போகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இம்முறையின் நோக்கம் நோயாளியின் உடம்பில் ஏற்படுத்தப்படும் துளையில் அளவைக் குறைப்தோடு, சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்பும் கால நேரத்தையும் வெகுவாக குறைக்கும் என்பதே.

இந்த அறுவை சிகிச்சையின் விதி முறைகள்:-

1. விலா எலும்புகளுக்கு இடைப்பட தூரத்தில் பகுதியில் மூன்று சிறிய துளைகள் ஏற்படுத்தப்படுகிறது.

2. ரோபட்டின் கரங்கள் மற்றும் ஒரு சிறிய கேமரா இத்துளையின் மூலம் உட் செலுத்தப்படுகிறது.

3. இணைக்கப்பட்ட இயக்க உணரிகள் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரோபட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. இதன்பிறகு அறுவை சிகிச்சைக்குத் தேவையான சாதனங்கள் ரோபட் கரத்துடன் இணைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர் கணினி முன் அமர்ந்து கொண்டு நோயாளியின் உடலில் உட்செலுத்தப்பட்ட கேமராவில் இணைப்புப் பெற்ற இரண்டு லென்ஸ் (கண்ணுக்கு ஒன்று விதமாக) பொருத்தப்பட்டு கண்காணித்து வழி வகை செய்கிறது. இதன் மூலம் நோயாளியின் உடல் பாகங்களை முப்பரிமாண காட்சியாக்கப்படுகிறது. உட்செலுத்தப்பட துல்லியமான கேமராவின் இயக்கங்கள் காலால் இயக்கப்படும் பாகம்  மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிபுணர்கள் உடலின் பாகங்களை 'ஜும்' செய்து பெரிதாகவோ சிறியதாகவோ காணலாம். அதுமட்டுமல்ல அறுவை செய்யப்படும் பாகத்தில் காட்சியை உடனடியாக மாற்றி பார்பதற்கும் வழி செய்கிறது.

4. நோயாளியின் உடலின் உட்செலுத்தப்பட்ட உட்காட்டி  சாதனத்தில் இரண்டு கரங்களுடன் இயக்கங்கள் நிபுணரின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இக்கரத்தின் முனைகள் இணைக்கப்பட்ட மிகச் சிறிய சாதனங்கள் நிபுணரின் கைகள் மற்றும் மணிக்கட்டின் இயக்கத்தில் அளவை வெகுவாக குறைத்திருக்கிறது. இதன் மூலம் மற்ற அறுவை சிகிச்சை போலல்லாமல் (ரோபட் இல்லாமல்) இந்த ரோபட் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாகவும் நிபுணரின் கை இயக்கங்கள் மிக எளிதாகவும் விளங்குகிறது.

5. நுணுக்கமாக வெட்டுதல்  மற்றும் தைத்தல் திறங்கள் மூலம் உட்காட்டி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அனைத்து ரோபட்டுகளின் இயக்கங்களும் கட்டுப்படுத் தப்படுவதால் ரோபட்டின் பாகங்கள் தன்னிச்சையாக இயங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

« back

Add a new comment

Manifo.com - free website building