தொழில்நுற்பம்

ஒளியின் வேகத்தை விஞ்சிய நியூற்றினோ.

2011-11-22 15:42:28, comments: 0Posted Image

அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன.

சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்...

கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..!

இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்துச் சிதறவிட்டு.. பரிசோதனை செய்த விஞ்ஞானிகள்... அந்தச் சிதறல்களில் இருந்து.. கடவுளின் துணிக்கை என்று இந்த பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறின் அடிப்படைக் கூறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால்.. அவர்களுக்கோ.. தேடிச் சென்றதை விட இன்னும் ஆச்சரியமான.. நவீன பெளதீகவியலை ஐயம் கொள்ளச் செய்கின்ற விடயங்களே கிடைத்தன.

அதில் ஒன்று நியூற்றினோக்களின் வேகம். நியூற்றினோக்கள்.. எனப்படுபவை.. உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள கூறுகளில் கட்டுண்டு கிடக்கின்றன. நியூற்றினோ கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டு காலம் போய்விட்டாலும்.. இப்போதுதான் அவற்றினை தீவிரமாக ஆராயக் கூடிய தொழில்நுட்ப வசதிகள் மனிதனுக்கு கிடைத்துள்ளது. இவற்றின் சிறப்பு என்னவென்றால்.. ஏற்றமற்ற இந்த மிகச் சிறிய துணிக்கைகள்.. மின்காந்தப் புலத்தின் ஆளுகைக்குள் சிக்கிக் கொள்ளாது.. ஒளியை விட வேகமாக.. எமது பூமிக்கூடாகக் கூட.. மிகச் சிறிய நேரத்தில் கடந்து சென்று விடவல்லன என்பது தான்.

Posted Image
படம்:பிபிசி  ஜெனிவாவில் ஐதரசன் அணுக்கருக்களை வெடிக்கச் செய்து.. அதன் விளைவுகளை அங்கும்.. இத்தாலியிலும் உணரவும் பரிசோதிக்கவும் செய்தனர். ஜெனிவாவில் இருந்து இத்தாலியில் இருந்த ஒரு ஆய்வு மையத்தை நியூற்றினோக்கள்.. கடந்து செல்வதை உணர்ந்தனர். அதன்படி அதன் வேகத்தை கணித்த போதே.. அவை ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் செய்தி கிடைத்தது.

இதனை விட CERN பரிசோதனை கண்டிபிடித்திருக்கும் இன்னொரு விடயம்.. D-Meson இன் டிக்கேய் பற்றியது. இதுவும் நவீன பெளதீகத்தின் அடிப்படைகளுக்கு மாறாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவையே கண்ணால பார்க்க முடியாது. இவங்க எல்லாம் எப்படி அணுவுக்குள்ள உள்ள கருவை வெடிக்க வைச்சு அதுக்குள்ள என்ன இருக்குது.. என்ன.. நடக்குது என்று சொல்லுறாங்க அப்படின்னு நீங்கள் வியக்கக் கூடும்.

அதற்கு முன்னர் ஐதரசன் குமிழி அறைகளைப் பயன்படுத்தினர். இது இப்போ.. ஆகாயத்தில் விமானம் பறந்து போனால்.. அது முகில்களை கூட்டிக் கக்கிவிட்டுச் செல்லும் போது.. அதன் பயணப் பாதை எமக்குத் தெரிவது போல.. இந்தத் துணிக்கைகளை.. ஐதரசன் முகில்களிடையே பரவ விட அவை.. அவற்றின் வேகம்.. இயல்பிற்கு ஏற்ப.. அப்படி பயணப் பாதைகளைக் காட்டிச் செல்லும். அந்தப் பயணப் பாதைகளை சக்திவாய்ந்த கமராக்கள் மூலம் கீழ் உள்ள வாறு படம் பிடிப்பார்கள். அதன் பின்னர் பயணப் பாதைகளின் இயல்பை ஆராய்ந்து.. துணிக்கைகளைப் பெயரிடுவார்கள்.

Posted Image
படம்:விக்கிபீடியா.இப்போது.. கணணி சார்ந்த உணரிகளை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அவை மிகவும் விரைவாகவும் திருத்தமாகவும் இதனைச் செய்கின்றன.

« back

Add a new comment

Manifo.com - free website building