தொழில்நுற்பம்

விஜய் டிவி தற்போது டிஷ் டிவி சௌத் சில்வர் பேக்கில்

2011-09-14 09:14:48, comments: 0

 

ZEE DISH TV DTH சேவையின் சவுத் சில்வர் பேக்கில் கூடுதலாக ரூ. 16 க்கு விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன் உள்ளிட்ட புதிய சானல்கள் இணைக்கப்பட்டுள்ளது பற்றிய பதிவு இது.

தரமற்ற கேபிள் டிவி காரர்கள் இம்சையால் Dish TV DTH வந்த புதிதிலேயே அதனை வாங்கி விட்டோம். அடுத்து டாடா ஸ்கை , தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து சன் DTH வந்த போதும் வச்சிருக்கிற Dish TV யை என்ன பண்ணுவது என்று மற்றவற்றிற்கு மாறவில்லை. நான்கு மாதம் முன்புவரை இருக்கிற எல்லா சானலையும் பார்க்கலாம் என்று DISH MAXI என்ற ப்ளானின் கீழ் மாதம் 300 ருபாய் வரை கட்டி வந்தோம்.

உலக பொருளாதாரம் வீழ்ந்த போது வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செலவுகளை குறைக்க முனைந்த போது இந்த 300 ருபாய் கண்ணை உறுத்தியது. பெரும்பாலும் வீட்டில் டிவி பெண்கள், குழந்தைகள் கட்டுப்பாடில் தான் உள்ளது. தப்பி தவறி ரிமோட்டை நம் கையில் வாங்குவதற்குள் படாதபாடாகி விடும். பெண்கள் சன் டிவி (சீரியல் கொடுமை :( ), குழந்தைகள் சுட்டி டிவி (இதில் ஒரு நல்ல விஷயம் குழந்தைகள் நிறைய தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ளுகிறார்கள்) என்பது மட்டுமே தினசரி சானல்களாக இருக்கின்றன. எப்போதாவது ரிமோட்டை கைப்பற்றி விஜய் டிவி கோபிநாத்தின் நீயா! நானா!! (வேலையத்தவனுங்க என்னத்த பேசுறாங்கன்னு இப்படி பாக்குரியோ? என்று வீட்டில் உள்ளவர்கள் புலம்பல் வேறு...) , கிரிக்கெட் நாட்களில் அதை பார்ப்பதுண்டு. மற்ற சானல்களை யாரும் சீண்டுவது இல்லை.

செலவை குறைக்கும் முயற்சியில் மாதம் ருபாய் 109 கட்டும் பெரும்பாலான தமிழ் சானல்களை உள்ளடக்கிய Dish TV Silver Pack ப்ளானுக்கு மாறலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த பிளானில் பார்த்தால் விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல்கள் இல்லை. விஜய் டிவி வேண்டும் என்றால் ருபாய் 55 க்கு Super Star Pack (Vijay TV, Star News, Star Gold, National Geo ... etc) வாங்க வேண்டும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வேண்டும் என்றால் தனியாக மாதம் ரூ. 35 க்கு Super Fiesta என்ற பேக் வாங்க வேண்டும். ஸ்டார் கிரிக்கெட் வேண்டும் என்றால் Howzaat Pack ரூ. 25 க்கு வாங்க வேண்டும்.

என்ன கொடுமை சார் என்று நொந்து கொண்டே என் சானல்கள் கட் செய்யப்பட்டன.

நான்கு மாதங்களும் ஓடி விட்டன. சன் டிவி அழுகைகளும், சுட்டி டிவியின் பைத்தியகார கத்தல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதற்கு ஒரு விடிவாக இன்று ஒரு செய்தி வந்தது. ஏப்ரல் 23 முதல் South Silver Pack மாதம் ரூ. 125 ஆக உயர்த்த படுகிறது. புதிதாக விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன் உள்ளிட்ட சானல்கள் இணைக்கபடுகின்றன.

அட்ட்ட்ரா... அட்ட்ட்ரா.... சூப்பர்.... கை பரபரத்ததால் பதிவாக போட்டு விட்டேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... ஷப்ப்ப்பா .... முடியல.... எல்லோரும் சொந்த கதை எழுதுறாங்களே... நாமளும் முயற்சி பண்ணலாம்.... என்று முயன்றதன் விளைவுதான் இந்த பதிவு... சொந்த கதையை சொரித்தனமா எழுதி ஏண்டா எங்களை சோதிக்குற என்று இது வரைக்கும் படித்தவர்கள் அடிக்க வராதீர்கள். இனிமேல் எழுத மாட்டேன். எப்படித்தான் சொந்த கதையையும் படு சுவாரசியமா நம்ம பதிவர்கள் எழுதுறாங்களோ?... பெரிய விஷயம்தான்...

இப்போ நான் சொல்ல வந்த விஷயம் என்னான்னா...? ZEE நெட்வொர்கின் DISH TV தங்களது South Silver Pack ப்ளானில் விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன் உள்ளிட்ட புதிய சானல்களை கூடுதலாக ரூ. 16 க்கு (இனி மாத கட்டணம் ரூ. 125) ஏப்ரல் 23 முதல் இணைக்க உள்ளார்கள். DISH TV வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றம் உபயோகமாக இருக்கும்.

ஆனால் நீங்கள் எந்த பிளானை தேர்ந்தெடுத்தாலும் NEO Sports பார்க்க முடியாது. (BCCI மற்றும் ZEE இடையே இன்னும் ICL சண்டை முடியல போலிருக்கு) . தற்போதைய IPL ஆட்டங்களை பார்க்க மாதம் ரூ. 45 க்கு Sony Feast பிளானில் சேர வேண்டும்.
« back

Add a new comment

Manifo.com - free website building