தொழில்நுற்பம்

இன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்

2011-09-14 09:26:12, comments: 0

 

கூகிள் குரோம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என்று டெக்க்ரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. கூகிள் நிறுவனம் குரோம் ஒஎஸ் எனும் இயங்குதளம் தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது இன்னும் ஒரு வாரத்தில் தரவிறக்கத்திற்கு கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரோம் ஓஎஸ் அடிப்படையில் லினக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது.  மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் போன்று இது பெரும்பாலான ஹர்ட்வேர் களை ஆதரிக்கும் படியான டிவைஸ் டிரைவர்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறி. இதன் ஆரம்ப பதிப்பு நெட்புக் கணினிகளை ஆதரிக்கும் படி வெளியிடப்படும். ஏசர், அசுஸ், லெனோவா போன்ற நிறவனங்களின் நெட்புக் கணினிகளில் தடை இன்றி வேலை செய்யும் என்று எதிர் பார்க்கலாம்.

காலப் போக்கில் அனைத்து கணினி ஹர்ட்வர்களிலும் தடை இன்றி இயங்கும்படி வெளி வரும். குரோம் ஓஎஸ் அடுத்த வாரம் வெளியாகிறது என்பதற்கு கூகுளிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மைக்ரோசாப்ட்டால் விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே படுகிறது. இயங்குதள உலகில் ஜாம்பாவானாக திகழும் மைக்ரோசாப்ட்டுக்கு கூகுளால் நிச்சயம் நல்ல போட்டியை கொடுக்க முடியும். இது நமக்கும் நல்லது.
« back

Add a new comment

Manifo.com - free website building